தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
அதிமதுரம்
அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.அவுரி இலை
அவுரி இலையின் பயன்கள்:
அவுரி இலைகள் - வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும்.
அவுரி வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.
ஆலம்பட்டை
ஆலம்பழ விதை
ஆவாரம் பூ
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்வார்கள்
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்இனிப்பு துளசி இலை
இனிப்பு துளசி இலை நன்மைகள்:
* இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.
* இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
* ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
* சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும்
பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
* இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.
உலர் நெல்லி
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.
செரிமான பிரச்சனையால் அதிகம் அவதிபடுபவர்கள் மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.
வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.
உலர்ந்த ரோஜா இதழ்
எலுமிச்சை தோல்
காய்ந்த எழுமிச்சை தோல்
காய்ந்த எழுமிச்சை தோலை காயவைத்து பொடியாக்கி, தேன், நாட்டுசர்க்கரை மற்றும் சிறிது விளக்கெண்ணை சேர்த்து, பசையாக்கி, முகத்தில் தடவி பின்னர், முகத்தை குளிர்நீரில் அலசிவர, முகத்தின் மருக்களான இறந்த செல்களை வெளியேற்றி, முகத்தைப் பொலிவாக, புத்துணர்வு பெற வைக்கும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம் போன்றவை சருமத்தை மிளிரவைக்க உதவுகிறது.
ஓமம்
ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.