கம்பு அவல்
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.
கம்பு அவல் நன்மைகள் :
* எலும்புகள் வலிமையாகும்.
* உடல் சூடு குறையும்.
* உடல் எடை குறையும்.
* உயர் இரத்த அழுத்தம் குறையும்.
* குடல் புற்றுநோய் குறையும்.
குதிரைவாலி அவல்
குதிரைவாலி அவல் பயன்கள் :
* குதிரைவாலியைத் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
* செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்துகிறது.
* இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளைக் கரைக்கும்.
* கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
* இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
* இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
கேழ்வரகு அவல்
கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க இது உதவும். உடல் எடை குறைக்க உதவும்! இதில் உள்ள ட்ரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும்.
கேழ்வரகு அவல் நன்மைகள் :
* பற்கள், எலும்புகள் உறுதி ஆகும்.
* உடல் சூடு குறையும்.
* மன அழுத்தம் குறையும்.
* தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
* உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக இருக்கிறது.
கொள்ளு அவல்
கோதுமை அவல்
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.
சாமை அவல்
சோளம் அவல்
சோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது, இவை, இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. சோளத்தில் வைட்டமின் ஏ உள்ளது, இது கண்பார்வையின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சோளத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
சோளம் அவல் நன்மைகள் :
* மூலம், மலச்சிக்கல் தீர.
* தயாமின், நியாசின் சத்துகள்.
* கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது.
* உடல் எடை கூட.
* ரத்த சோகை நீங்க.
* கண்கள் நன்கு தெரிய உதவும் .
வரகு அவல்
சிறுதானிய வகைகளுள் வரகும் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
வரகு அவல் நன்மைகள் :
* சீறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.
* இதய ஆரோக்கியம் மேம்படும்.
* இரத்தம் சுத்தமடையும்.
* ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
* மலச்சிக்கலை போக்கும்.
* நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.