Showing all 6 results

ஆமணக்கு எண்ணெய் ( விளக்கெண்ணெய் )

150.00300.00
ஆமணக்கு எண்ணெய் ஒரு மலமிளக்கியாகும் மேலும் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. அடிக்கடி மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்ல நிவாரணி. காலையில் ஆப்பிள் பழச்சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து பருகினால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

இலுப்பை எண்ணெய்

150.00300.00
நமது முன்னோர்களும் சித்தர்களும் சொல்லி எழுதி வைத்துச் சென்ற அருமையான ஒரு மருந்து இந்த இலுப்பை எண்ணெய். இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்டது. மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது. நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம். நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி. இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால்கள் வலி ஆகியவற்றிற்கு இந்த எண்ணையை, சிறிது மென்மையாக சூடேற்றி, அதை தடவி பின்னர் மிதமான வெந்நீரில் சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டால் எளிதில் குணமடையும். ஆண்களுக்கு ஏற்படும் விரை வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. இந்த எண்ணையை சிறிது சூடுபடுத்தி நான்கைந்து முறை தடவி வந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். சருமத்தை மிருதுவாக்கும், தோல் சுருக்கங்களை நீக்கும். வாரம் ஒரு முறை நன்றாக உடலில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் இதை கழுவி குளித்து வந்தால், சருமம் பளபளப்பாக அற்புதமாக இருக்கும். விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி வாய்ந்தது இந்த அற்புதமான எண்ணெய். விஷப் பூச்சிகளின் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி படுத்தும் தன்மையுடையது இந்த எண்ணெய். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் குணமாக்கும் தன்மை உடையது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றிற்கும் இந்த எண்ணெய் அருமையான மருந்து ஆகும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சில துளிகளை இந்த எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம். கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தாலும், சிலருக்கு இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பதாலும் உண்டாகக்கூடிய கண் எரிச்சல், கண் அயர்ச்சி, கண்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது அருமையான மருந்து ஆகும். அதற்கு இலுப்பை எண்ணெயை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம். கண்பார்வையும் மிகத்தெளிவாக அமையும். வயிற்றில் செரிமான மண்டலத்தை சீர் அடையச் செய்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை உடையது இந்த எண்ணெய். சில துளிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காச நோய் கிருமிகளையும் ஆஸ்துமா கிருமிகளையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது இந்த எண்ணெய். ஆக மொத்தமாக இந்த இலுப்பை எண்ணெய் ஒரு தெய்வீக தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் சிவபெருமானுக்கு உகந்த எண்ணெய்களில் முதன்மையானதாகவும், சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவது இந்த எண்ணெய்.

எள் விளக்கு எண்ணெய் 

120.00240.00
தீபம் ஏற்றுவதற்கு உகந்த எள் எண்ணெய் விளக்கேற்ற எத்தனை வகையான எண்ணெய்கள் உருவானாலும் எள் எண்ணெயால் ஏற்றப்படும் தீபத்துக்கு சக்தி அதிகம். எள் எண்ணெயில் மகாலட்சுமி  வாசம் செய்வதாக ஐதிகம். எள் உஷ்ணமிக்கது. எள் எண்ணெய் குளிர்ச்சிதரக்கூடியது

தூபக்கால்

250.00
இரும்பினால் செய்யப் பட்ட தூபக்கால் ( முலாமிட்டது ) சாம்பிராணி போடுவதற்கு பயன்படும் தூபக்கால் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இந்த தூபக்காலில் அடுப்புக்கரி, தேங்காய் சிரட்டை, தேங்காய் நார் என தேவைப்படும் அளவிற்கு வைத்து நெருப்பு பற்ற வைத்து தணல் உண்டாக்கி அதில் சாம்பிராணி இட்டு இல்லம் முழுவதும் சாம்பிராணி காண்பித்தால் ஆரோக்கியம் வளரும், பிணி  அண்டாது. தெய்வம் குடிக்கொள்ளும்.

பஞ்சதீப எண்ணெய்

125.00250.00
பசு நெய், விளக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஐந்து விதமான எண்ணெய்களை கலந்து தயாரிக்கப்படுகிறது பஞ்ச தீப எண்ணெய்.

வேப்ப எண்ணெய்

150.00300.00
நமது நாட்டில் தோன்றிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். வேப்ப மரம் இந்திய நாட்டின் பூர்விக மரம். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெயாகும். தோல் சுருக்கம் வயது அதிகரிக்கும் போது நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில் அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் வேப்ப எண்ணையை தடவுவது நல்லது. பாத நோய்கள் மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின்தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும். வயிற்று கிருமிகள் இனிப்புகளை அதிகம் சாப்பிடும் குழந்தைகளில் பலருக்கும் அவர்களின் வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு நவீன மருந்துகளை எடுத்துக்கொண்டாலும். அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும். புற்று நோய் வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. சொரியாசிஸ் தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்னையை குணப்படுத்தலாம்.