இறைவி
ஆசிரியர்: கார்த்திகேய பாண்டியன்
இறைவி
பெண் விடுதலை இல்லையேல்
மண் விடுதலை இல்லை
எது என் மரபு ?
எது என் வழிபாடு ?
யார் எனது தெய்வங்கள் ?
என் வாழ்வியல் முறைக்கு சற்றும் பொருந்தாத வழிபாட்டுமுறையை நோக்கி ஓடச் செய்வது எது ?
என் வேண்டுதல்கள் ஏன் வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் ?
சாமி கும்பிடுவதில் கூட ஒரு வணிகமயமானது ஏன் ?
நான் ஏன் கடவுளை தொடக்கூடாது ?
என் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை தானே இலக்கியங்கள் ஆனது ?
சரி வென்றவன் வாழ்வே இலக்கியம் என்றாலும் தோற்றவன் வாழ்வை நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கூடவா சொல்லி விடாது ?
அனைத்துக்கேள்விகளுக்கும் தமிழ் இலக்கியங்கள் பதில்சொல்லும் தானே.
வழிபாடு எப்படி தொடங்கியிருக்கும்?
தெய்வங்கள் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கும்?
இது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சித்து உள்ளேன்
-கார்த்திகேய பாண்டியன்
எஞ்சாமிகள்_2
மனிதச்சிறகுகள்
கவிதை தொகுப்பாளர்: வெற்றிச்செல்வன் இராசேந்திரன்
வணக்கம் தமிழ் சொந்தகளுக்கு
ஏதோ சிறுவயதில் அப்பப்போ காதல் கவிதைகளை எழுதி அதை யாருக்கும் தெரியாமல் வெளிக்காட்டாமலே மறைத்து வைத்து வந்தவன் நான். வயது வளரத்தான் புரிந்தது காதலுக்கு மட்டும் கவிதை எழுதுவது என்பதைவிட பார்க்கும் எல்லாவற்றிற்கும், பறக்கும் எல்லாவற்றிற்கும், தவிக்கும் எல்லாவற்றிற்கும், இறக்கும் எல்லாவற்றிற்கும், மழை, மேகம், வண்டு, மொட்டு, உதிர்ந்த பூ, இறந்த குருவி, இறக்க இருக்கும் விலங்கு என் எல்லாவற்றிற்கும் எழுதலாம் என்று!
2015க்கு பிறகே எழுதிய கவிதைகளை சேகரித்து தொகுப்பாக வெளிவிடவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை வந்தது.கவிதை எழுதுவதில் பக்குவப்பட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமென்று ஆவல் வந்துகொண்டே இருக்கிறது. தாய்க்கு முதல் பிள்ளை பிரசிவிக்கும்போது இப்படித்தான் உணர்வு இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஏதோ ஒருவித புது உணர்வு உண்டு.
கவிதை உலகில் நம்மை சுற்றி பல பேராளுமைகள் இருந்தாலும் நான் ஒரு சிறு புள்ளியாக என் தொகுப்பை வெளியிடுகிறேன்.

யார் தமிழர்
ஆசிரியர்: அர. குமரேசன்
தேவையே நமது நகர்வுகளை, நமது முன்னெடுப்புகளை தீர்மானிக்கிறது. ஒரு நிலத்தின் அரசியல் தேவை தான் அந்நிலத்தின் படைப்புகளின் தேவையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தமிழர் நிலத்தின் தற்போதைய அரசியல் தேவையாக தமிழர்தேசியம் இருக்கிறது. அத்தேவையின் பொருட்டே பொறியாளர் அண்ணன் .அர. குமரேசன் அவர்களால் "யார் தமிழர்?" என்ற இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அத்தேவையின் பொருட்டே தமிழர்தேசிய படைப்புகளை ஊக்குவித்து பதிப்பித்து வெளியிட ஆவல்கொண்டிருக்கும் எங்கள் தைத்திங்கள் பதிப்பகம் இந்நூலை பதிப்பிக்க கடமைப்பட்டுள்ளது.
புதுகோட்டை மாவட்டம் சுந்தரசோழபுரத்தை பூர்வீகமாக கொண்ட பொறியாளர் அண்ணன் அர. குமரேசன் அவர்கள் பண்பான தமிழ்தேசிய சிந்தனையாளர். சிறந்த தமிழ்தேசிய செயல்பாட்டாளர். பொறியாளர் அர. குமரேசன் இந்நூலை தமிழர்களுக்கான ஒரு பொறியாக வைத்துள்ளார். இந்த பொறி சிக்கவைக்கும் பொறியல்ல, அந்நிய மோகத்திலும், திரை மோகத்திலும், மது போதையிலும் சிக்கியிருக்கும் தமிழர்களின் விடுதலைக்கான பொறி.
"யார் தமிழர்?" என்ற இந்நூல் யார் தமிழர் என்பதை தெளிவாக பேசியிருக்கிறது. தமிழ் தேசியவாதிகளிடம் பெரும்பாலும் ஊடகங்கள் கேட்கும் யார் தமிழர்? என்ற கேள்விக்கான பதில் அல்ல இது. அயலார்கள் தமிழ்தேசியவாதிகளிடம் கேட்கும் யார் தமிழர்? என்ற கேள்விக்கான பதில் அல்ல இது. மாறாக தமிழர்கள் ஒவ்வொருவரும் யார் தமிழர்? என்ற புரிதலை அடைவதற்கான நூலாக இந்நூல் உள்ளது சிறப்பு. தமிழர்கள் தங்களை தமிழர்களாக உணர்ந்துவிட்டால் யார் தமிழர்? என்ற அடுத்தவர் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அர. குமரேசன் அவர்களுடைய கனவுத் தமிழ்நாடு தான் தைத்திங்கள் பதிப்பகத்தினுடைய கனவுத் தமிழ்நாடும். தமிழர்களின் கனவுகள் மெய்படட்டும். தமிழர்களின் கனவுத் தமிழ்நாடு வளம்பெரட்டும்.
பொறியாளரின் இந்நூலை படித்தால் மழுங்கடிக்கபட்டிருக்கும் தமிழர்களின் தலையில் விடுதலைப் பொறித்தட்டும்.