Showing the single result

மைசூர் பருப்பு

85.00170.00
மசூர் பருப்பு அல்லது மைசூர் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தென்னிந்திய சமையலில் பெரிதும் பயன்படுகிறது

மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்ககூடியது என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் மசூர் பருப்பு உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. கேசரி பருப்பு என்றொரு பருப்பு வகை இருக்கிறது. அது பார்பதற்கு அச்சு அசல் மசூர் பருப்பு போன்றே இருக்கும். அந்த பருப்பு வகை தான் உடலுக்கு நல்லதல்ல. இந்த கேசரி பருப்பை மசூர் பருப்புடன் கலப்பதால் தான் மசூர் பருப்பு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது.

இரும்புபுரதம்நார்ச்சத்து, வைட்டமின் சிபி 6பி 2ஃபோலிக் அமிலம்கால்சியம்துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் போன்றவை மசூர் பருப்பில் அதிகம் உள்ளது. ஒரு கப் மசூர் பருப்பில் உங்களுக்கு 14 கிராம் புரதம்8 கிராம் உணவு நார்44.5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 6 மி.கி இரும்புசத்து போன்றவை இருக்கிறது. இந்த பருப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் இதில் உள்ள நார்சத்து காரணமாக உடல் எடை குறையும்.