அபிசேக பஞ்ச கவ்யம்
பதினாறு அபிசேக பஞ்ச கவ்யம் / 100 மில்லி
உபயோகம்: யாகம், அபிசேகம், மற்றும் வீடு, தொழில் நிறுவனங்களில் தெளிக்க தீயசக்திகள் விலக்கி தெய்வ அருள் கிடைக்கும்.
மூலப்பொருட்கள்: பால், தயிர், நெய், நாட்டு பசு சாணம், கோமியம், வாசனை திரவியங்கள், கரும்புச்சாறு, விபூதி, குங்குமம், மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, இளநீர், துளசி, பன்னீர், குங்குமப்பூ மற்றும் பழ வகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்டது.
குங்குமம்
100 கிராம்
சித்தர்கள் முறைப்படி இயற்கை மூலிகைகளைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்ட தரமான குங்குமம்.
சக்தி வாய்ந்த அம்மன் சன்னதிகளில் இரு மண்டல பூசை செய்யப்பட்டது. நம் புருவ மத்தியில் குங்குமத்தை இடுவதன் மூலம் தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம், காரிய வெற்றியும் முக வசீகரமும் அருளும் அற்புதமான குங்குமம்.
பஞ்ச கவ்ய விளக்கு
10 எண்ணிக்கை
பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறுகிறோம்.
பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது
ஒன்று: பசுஞ்சாணம் இரண்டு: பசுவின் கோமியம் மூன்று: பசும்பால் நான்கு: பசுந்தயிர் ஐந்து: பசுநெய்
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கூடத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும் சரி. அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கட்டாயம் நெய்தான் ஊற்றவேண்டும். திரிபோட்டு ஏற்றிவிட வேண்டும். தீபம் மட்டும் எரிந்த பின்பு அனைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்விய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும்.
எரிந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனைத் தரும்.