Showing all 2 results

பசுஞ்சாண வறட்டி

60.00
வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) சிறு வேள்வியாகும். இவ்வேள்வியை யார் உதவியின்றி தனிமனிதன் செய்ய வேண்டியது. இந்த வேள்விக்காக, அன்றாடம் நாட்டு பசு விடியற் காலையில் இடும் சாணத்தை உடனடியாக எடுத்து சூரிய ஒளியில் அச்சில் வார்த்து பக்குவமாக வறட்டியை தயாரிக்கிறோம். வேள்வி  செய்ய வேண்டிய பொருட்கள்: சிறு அக்னி குண்டம், சாண வறாட்டிகள், பசு நெய் மற்றும் முனை உடையாத பச்சரிசி. ஒரு இடத்தில் செய்யும் வேள்வி ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு காற்றை சுத்தப் படுத்தும்.பிராண சக்தியை காற்றில் நிறைக்கிறது. பசுஞ்சாணம் மிகச் சிறந்த கிருமிநாசினி இவற்றோடு அரசு, ஆல், பலா, அத்தி, வேலங் குச்சிகளையும் அக்னி வளர்க்க பயன் படுத்தலாம்.

பசுஞ்சாணப் பொடி

40.00
இல்ல வாசலில் தெளிக்க மூலிகை சாணப் பொடி மூலபொருட்கள்: நாட்டு மாட்டு சாணம், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பச்சைக் கற்பூரம் மற்றும் வேப்பிள்ளை. வாசலில் சாணம் மொழுகுவது தமிழரின் நீண்ட நெடும் பண்பாடு ஆகும், கால மாற்றம் மற்றும் இருப்பிட மாற்றம் பெரும்பாலும் சாணம் தெளிக்கவோ மொழுகவோ இயலாமல் போனது. நவீன காலத்திலும் நாம் அதை மீட்டு செய்ய வேண்டும் என்பது எங்களின் இலக்கு. இந்த பசுஞ்சாணப் மூலிகை பொடியை நீரில் கலந்து வாசலில் தெளிப்பதால் கிருமிகள் அண்டாது, பூச்சி தொல்லை இருக்காது, ஆரோக்கியம் வளரும்,  தெய்வீக அருள் கிட்டும்.