உருண்டை வடிவ சிகப்பு நிற அரசியான இந்த கொத்தமல்லி சம்பா பிரியாணி புலாவ் போன்ற உணவுகளை தயாரிக்க சிறந்த ஒரு அரிசி. அதுமட்டுமில்லாமல் சாதாரண அரிசி சாதம் ஆகவும் இதனை தயாரிக்கலாம். பல விதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்த அற்புதமான அரிசி, இதனுடைய தவிடு அதாவது சிகப்பு நிறத்தில் மேல் தோலில் உள்ள விட்டமின் சத்துக்கள் தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது
பொதுவாக உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட கூடிய நேரங்களில் அந்த இடத்திலிருந்து வெளியிடக்கூடிய ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய தன்மையை அதிகமாக கொண்ட அரிசி என்றால் அது இந்த கொத்தமல்லி சம்பா அரிசி தான், இந்த சிவப்பு நிற பாரம்பரிய அரிசியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் இரத்தத்தை உறைய கூடிய தன்மை கொண்டதாகும் எலும்புகளுக்கு வலுவூட்ட கூடியதாக உள்ளது.
பசியை தூண்டக் கூடிய இந்த அரிசியை செரிமானத்தை அதிகரிக்க கூடியது ஆகும், இதனை சமைப்பது மிகவும் எளிமையானது இந்த அரிசியில் இட்லி தோசை இடியாப்பம் புட்டு என பலவிதமான உணவுகளை தயாரித்து உண்ணலாம் சாதம் செய்து உடலுக்கு வலிமையை தரும்.
Reviews
There are no reviews yet.