வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – கோ. நம்மாழ்வார்
பக்கம்: 180
நம்முடைய பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் நம்மாழ்வாரின் 25-வது புத்தகம் இது. நிச்சயம் இது ஒரு வித்தியாசமான புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள 30 கட்டுரைகள்; இடையிடையே பெட்டிச் செய்திகளாக சில முக்கியமான வேளாண்மை புள்ளிவிவரத் தகவல்கள்; பேராசிரியர் முருகையன், அவருடைய மகள் வாசுகி ஆகிய இரு கதாபாத்திரங்கள் நிகழ்த்தும் இன்றைய வேளாண்மை தொடர்பான உரையாடல்கள்… யாவும் ஒரே விடயத்தைத்தான் பேசுகின்றன: இன்றைய அரசாங்கங்களும் அறிவியலாளர்களும் ஏன் நவீன விவசாயத்தை வரித்துக்கொள்கின்றனர்; ஏன் இயற்கை வேளாண்மையைப் புறந்தள்ளுகின்றனர்? என்பதே அது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒரு சாதாரண வாசகர் ஒரு நுகர்வோராகத் தான் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்று கடுமையான கோபத்துக்கு ஆளாக நேரிடும். விவசாயிகள், அரசின் வேளாண் அமைப்புகள், அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; நுகர்வோராகிய பொதுமக்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
Reviews
There are no reviews yet.