தோல் நீக்கப்படாத உளுந்தை அதன் முழுசத்தும் குறையாமல் உடைத்து பயன்படுத்துவது உளுந்து பொட்டு என்று அழைக்கப்படுகிறது . இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள
தீர்கிறது.கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் அடிபட்ட இடத்தில் பிராணவாயு அதிகம் கிரகிக்க செய்து புண்களையும், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குகிறது.எனவே குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.உடல் உற்சாகம் அடைந்து, சக்தி அதிகரித்து நீண்ட நேரம் செயலாற்றக் கூடிய ஆற்றல் கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.