கருப்பு கவுனி அரிசியின் பலன்கள்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும்.
இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது, உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது, இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.
Reviews
There are no reviews yet.