ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
பக்கங்கள்: 88
காதல் கதைகளையோ, துப்பறியும் கெட்டிக்காரத்தனத்தையோ எழுதுபவன் அல்ல நான். புரிந்தும் புரியாத சூட்சுமத்தை உள்ளடக்கிய மேட்டுக்குடி கதைகளும் அல்ல. இந்தக் கதைகள் நூறு. எழுபது, அறுபது, வருடங்களுக்கு முந்தைய சேதுநாட்டு மக்களைப் பற்றியவை. உறவுகளை பாதுகாத்த, நட்புக்கு உயிர்கொடுத்த, ஜாதிபேதம் பாராட்டாத, எதிரிகளை நேருக்குநேர் நின்று சாய்த்த, மானுடம்போற்றிய மக்களைப் பற்றியவை. எளிய மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, அவர்கள் மொழியில் பேசுபவை.
ஆட்டம் எதுவானாலும் கவனமா ஆடணும். அதிலேயும் ‘குருதி ஆட்டம்’ ரெம்ப கவனமா ஆடணும். கரணம் தப்புனா, மரணம்தான். எத்தனையோ ஆட்டக்காரர்களை கண்டிருக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. என் எழுத்தில் பல ஆட்டங்களை ஆடியவன் நான். நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறுத்தி, நிதானமாக ஆடிய ஆட்டங்கள் சொற்பமே. ‘இந்து தமிழ் நாளிதழில் 27 வாரங்கள் தொடராக வெளிவந்த, ‘குருதி ஆட்டம்’, ‘ஜூனியர் விகடன்’ இதழில் 61 அத்தியாயங்கள் வெளிவந்த, ‘பட்டத்து யானையின் விட்ட குறை, தொட்ட குறை. ‘பட்டத்து யானை’யை, 100 அத்தியாயங்கள் நடத்திக்கொண்டு போயிருக்க வேண்டும். சூழல் அனுமதிக்கவில்லை. அதிலும் நான் சினிமாவுக்குள் வந்தபின்னால், என் நேரம், என் கையில் இல்லை . முன்னேயும் பின்னேயும் இழுக்குது.. இந்தக் குருதி ஆட்டத்தையும் 50 வாரங்களுக்குமேல் நான் ஆடியிருக்க வேண்டியவன். 27 வாரங்களுக்குமேல் இழுக்க முடியவில்லை.
– வேல ராமமூர்த்தி
Reviews
There are no reviews yet.