உலர் திராட்சையில் நிரம்பி இருக்கும் இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. எனவே தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை பிரச்னை குணமாகும்.
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம். இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.
Reviews
There are no reviews yet.