ஓவிய விபரம்: கணினி கலை எண்ணியல் அச்சு
( Digital Print, Matte finishing and Framed )
ஓவியர்: திரு. விஷ்ணு ராம்
வரலாறு:
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
560 ft (170 m) நீளமும் 320 ft (98 m) அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 m (341 ft) by 30.5 m (100 ft) அளவுகொண்டுள்ளது.[3] லிங்கத்தின் உயரம் 4 m (13 ft); அடிப்பகுதியின் சுற்றளவு 18 m (59 ft).[4] 100 sq ft (9.3 m2) அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 ft (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் 55 m (180 ft); இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட 3 m (9.8 ft) உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன.[3] மற்றெந்த சிவன் கோயில்களிலும் உள்ள இலிங்கங்களைவிட, 4 m (13 ft) அடி உயரமுள்ள இக்கோயில் இலிங்கம் மிக உயரமானதாகும்.
கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி (200 m (660 ft)) அமைக்கப்பட்டுள்ளது.[6] கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 ft (2.9 m) ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.
அண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. கொடி மரம் அமைக்கப்பட்ட பின்னர் பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது.
Reviews
There are no reviews yet.