அளவு: 36X80
பவானி ஜமுக்காளம் - Bhavani Jamakkalam
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.
Reviews
There are no reviews yet.