கவிதை தொகுப்பாளர்: வெற்றிச்செல்வன் இராசேந்திரன்
வணக்கம் தமிழ் சொந்தகளுக்கு
ஏதோ சிறுவயதில் அப்பப்போ காதல் கவிதைகளை எழுதி அதை யாருக்கும் தெரியாமல் வெளிக்காட்டாமலே மறைத்து வைத்து வந்தவன் நான். வயது வளரத்தான் புரிந்தது காதலுக்கு மட்டும் கவிதை எழுதுவது என்பதைவிட பார்க்கும் எல்லாவற்றிற்கும், பறக்கும் எல்லாவற்றிற்கும், தவிக்கும் எல்லாவற்றிற்கும், இறக்கும் எல்லாவற்றிற்கும், மழை, மேகம், வண்டு, மொட்டு, உதிர்ந்த பூ, இறந்த குருவி, இறக்க இருக்கும் விலங்கு என் எல்லாவற்றிற்கும் எழுதலாம் என்று!
2015க்கு பிறகே எழுதிய கவிதைகளை சேகரித்து தொகுப்பாக வெளிவிடவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை வந்தது.கவிதை எழுதுவதில் பக்குவப்பட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமென்று ஆவல் வந்துகொண்டே இருக்கிறது. தாய்க்கு முதல் பிள்ளை பிரசிவிக்கும்போது இப்படித்தான் உணர்வு இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஏதோ ஒருவித புது உணர்வு உண்டு.
கவிதை உலகில் நம்மை சுற்றி பல பேராளுமைகள் இருந்தாலும் நான் ஒரு சிறு புள்ளியாக என் தொகுப்பை வெளியிடுகிறேன்.
Reviews
There are no reviews yet.