கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் கம்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
கால்சியம் சத்து – 42 கிராம்.
இரும்புச் சத்து – 11 முதல் 12 மி. கிராம்.
வைட்டமின் B 11 – 0.38 மி. கிராம்
ரைபோபிளேவின் – 0.21 மி. கிராம்
நயாசின் சத்து – 2.8 மி. கிராம்
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
கம்பு அவல் நன்மைகள் :
* எலும்புகள் வலிமையாகும்.
* உடல் சூடு குறையும்.
* உடல் எடை குறையும்.
* உயர் இரத்த அழுத்தம் குறையும்.
* குடல் புற்றுநோய் குறையும்.
Reviews
There are no reviews yet.