மருத்துவ பயன்கள்
ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.
ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம்.
மன உளைச்சல், மன அழுத்தத்தினை போக்கும் நிவாரணியாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.
Reviews
There are no reviews yet.