பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. குழிகளில் கற்களை எடுத்து விளையாடும் போது விரல்களுக்கு பயிற்சி கிடைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் நுண்ணிய கணிதத்திறன் அதிகரிக்கிறது. அறிவுத்திறனும், வாய்ப்புநிலை இயல்பும் இவ்விளையாட்டில் காணப்படுகிறது.
பல்லாங்குழி உடல் ரீதியாக பெண்ணின் விரல் மற்றும் கைகளுக்கு வலுச் சேர்க்கிறது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு, சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுதல் அவசியம். மேற்சொன்ன அனைத்தையும், விளையாட்டின் வழியே பெண்களின் மனதில் பதிய வைக்க, நம்முன்னோர்கள் கண்டறிந்த பல்லாங்குழி விளையாட்டில் உள்ளது. திருமண நாளன்று மாலையில் மனைவி பல்லாங்குழி விளையாடுவதைப் பார்த்து, அப்பெண்ணின் நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறமை, வீட்டின் நிதிநிலையை சமாளிக்கும் திறன், சிக்கனம், மதி நுட்பம் ஆகியவற்றை கணவன் அறிந்து கொள்கிறார்.
பல்லாங்குழி விளையாட்டில் பல வகைகள் இருக்கின்றன 1. பசுப்பாண்டி , 2. சரிப்பாண்டி 3. எதிர்ப்பாண்டி 4. இராஜாப்பாண்டி, 5. காசிப்பாண்டி, 6. கட்டுப்பாண்டி, 7. சீதப்பாண்டி என்று தமிழறிஞர்கள் பிரித்துள்ளனர். மேலும் அரிப்பாண்டி, முத்துப்பாண்டி, தாயிச்சிப்பாண்டி என்று மூன்று வகைகளை குறிப்பிட்டுள்ளனர்.
பல்லாங்குழியென்பது பண்ணாங்குழி, பன்னாங்குழி, பள்ளாங்குழி, பதினாங்குழி, பரலாடும் குழி, பாண்டி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. பல அழகிய குழிகளை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆட பெறுவதால் (பல+ஆம்+குழி=பல்லாங்குழி) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கிராமத்தில் நெல்க்குத்துவதற்காக தோண்டப்படுகின்ற சிறுபள்ளத்தை பண்ணை என்று கூறுவதுண்டு. அதைப் போலவே சின்ன பள்ளம் தோண்டி கற்களையிட்டு ஆடுவதால் ‘பண்ணாங்குழி’ எனப்படுகின்றது.பள்ளம்+குழி எனப்பிரித்தால் பூமியில் பள்ளம் தோண்டி குழியாக்கி கற்களை இட்டு விளையாடப்படுவதால் ‘பள்ளாங்குழி’ என வழங்கப்பட்டிருக்கலாம். பதினான்கு குழிகள் இருப்பதால் பதினாங்குழி எனப் பட்டிருக்கலாம். மேலும் ‘முத்து’ என்பதற்கு ‘பரல்’ என்றும் பொருள் உன்டென்பதால் பரலாடும் குழி என்று மாறியிருக்க்கலாம். இவ்விளையாட்டிற்கு பாண்டியாட்டம் என்ற பெயரும் உண்டு.
14-குழிகளில் கற்களையோ அல்லது புளியமுத்தையோ ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் வைத்து தங்களின் குழியிலிருந்து காய்களை எடுத்து வலமிருந்து இடதுபுறமாக அனைத்து குழிகளிலும் காய்களை போட்டு வரவேண்டும் கய்கள் தீர்ந்த பின்பு அடுத்த குழியிலிருந்து காய்களை எடுத்து போடவேண்டும் எவ்வாறு போட்டு வரும் போது காய் தீர்ந்து விடும்போது பக்கத்து குழியில் காய் ஏதும் இல்லாமல் இருந்தால் அதற்கு அடுத்த குழியில் உள்ள கைகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளலாம் பின்னர் அதே போல எதிரே இருப்பவர் விளையாடுவார் இவ்விளையாட்டில் முடிவு தெரிய அதிக நேரம் எடுக்கும். ஆட்டத்தை தொடர முடியாவிட்டால் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய எவரிடம் காய்கள் அதிகமாக இருக்குமோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.
Reviews
There are no reviews yet.