ஓவிய விபரம்: கணினி கலை எண்ணியல் அச்சு
( Digital Print, Matte finishing and Framed )
ஓவியர்: திரு. விஷ்ணு ராம்
இராசேந்திர சோழன் தான் கட்டிய கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலை பார்வையிடும் காட்சி
வரலாறு:
இராசேந்திர சோழன் வங்காள தேசத்தை ஆண்ட மன்னர் மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழ நாட்டுடன் இணைத்தார். அதன் வெற்றியைச் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கினர்.இராசேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவபெருமானுக்காகஇராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்தயாவில் வாயுக் கடவுளுக்குக் கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.
இராசேந்திரசோழன் இளவரசனாக இருந்த பொழுதே சோழப் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன்.இராசேந்திரசோழன் தலைமையில் சோழப்படைகள் கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்தது. மேலும்இராசேந்திரசோழன் தெலுங்கரையும் இராட்டிரகூடரையும் வென்றான்.இராசேந்திரசோழன் வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். ‘பஞ்சவன் மாராயன்’ என்ற பட்டமும்இராசேந்திரசோழனுக்கு கொடுக்கப்பட்டது.இராசேந்திரசோழன் ‘மும்முடிச் சோழனின் களிறு’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான்
Reviews
There are no reviews yet.