சப்ஜா விதையில் ஒமேகா 3 அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. மேலும் நார் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு இந்த விதை சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் உணவு பாதையில் ஏற்படும் புண்களை இந்த விதை போக்குகிறது
உடல் பருமனுக்கு மற்றுமொரு காரணம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது. சப்ஜா விதைகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவும். இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது.
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவை செரிமான நொதிகளை உருவாக்கும். இந்த நொதிகள் உங்களின் செரிமானத்தை பலப்படுத்தும். அத்துடன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், பசியைக் குறைப்பதோடு, பசிப்பது போன்ற உணர்வினையும் இது தடுக்கும்.
சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இந்த விதைகள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் எடை இழப்புக்கு அவசியமான தாதுக்கள் ஆகும்.
முதலில் இந்த சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்துக் கொல்ல வேண்டும். ஊற வைக்கும்போது அந்த விதைகள் அதிக அளவில் நீரினை உறிஞ்சிக் கொள்ளும். இதன் விளைவாக அதன் நார்ச்சத்து அதிகரிப்பதோடு, செயமான நொதிகளும் உருவாகும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்த சப்ஜா விதைகளை அப்படியே கூட உண்ணலாம். அல்லது வழக்கமான எலுமிச்சை ஜூஸ், பலூடா அல்லது பிறவகையான பிரெஷ் ஜூஸ் உடன் சேர்த்து அருந்தலாம்.
Reviews
There are no reviews yet.