ஓவிய விபரம்: கணினி கலை எண்ணியல் அச்சு ( Digital Print, Matte finishing and Framed )
ஓவியர்: திரு. விஷ்ணு ராம்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.
சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல்கடந்த
பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.
அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில்
கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத்தொடங்கியது.
இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு
பேரெழுச்சி பெற்றது.
இவர்களில் முதன்மையானவன்
“சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்”.
வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை)
தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.
இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.
தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.
நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்.
Reviews
There are no reviews yet.