நிலைத்த பொருளாதாரம் – ஜே.சி. குமரப்பா
இந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை. மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாக அவர் செய்ததெல்லாம் பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்ம பணிதல் செய்கின்றார் குமரப்பா.குருவி, மலை, நாணல் செடி, பழம், ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச் செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்துக் கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன. ஒன்று மற்றதை வாழ்ந்து செழிக்க வைக்கின்றன.
இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும். முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும் ததும்பும் சூழலில் இயற்கையின் உள்வெளி லயத்துடன் பொருளாதாரத்தைக் கச்சிதமாகக் கொண்டு பொருத்தி அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கின்றது இந்த நூல். இந்த நூலை மொழியாக்கிய அ.கி. வேங்கட சுப்ரமணியனின் நடை சிறப்பாக உள்ளது. நூலின் எழுத்துரு, பத்தியமைப்பு, வெளி அட்டை வடிவமைப்பு, உள் ஓவியங்கள், தரமான அச்சுத்தாள் என அனைத்திலும் செய்நேர்த்தி மிளிர்கின்றது.
Reviews
There are no reviews yet.