ஓவிய விபரம்: கணினி கலை – எண்ணியல் அச்சு
ஓவியர்: மாதவன்
DIGITAL PRINT/ MATTE LAMINATION / FIBER FRAME / NON BREAKABLE
கிராமபுற தமிழர்களின் இன்றியமையா பிராணிகளில் கோவில் காளை ஒன்றாகும்
கோவிலுக்கு நேர்ந்து விட்ட காளைகளை இறைவனுக்கு நிகராக கருதி வழிபடுவர்கள். சல்லிக்கட்டில் மரியாதை நிமித்தம் கோவில் காளைகளை அவிழ்த்து விடும்பொழுது அக்காளையை எந்த ஒரு வீரரும் அதை பிடிப்பதில்லை.
கோவில் காளை பல ஆண்டுகள் தங்கி ஆலயத்தை காவல் காக்கும்,. ஆலயத்தின் உள்ளே புல்வெளியில் படுத்தும், ஆலயத்தின் வெளியே திருச்சுற்று சுவர் அருகேயும் ஓய்வு எடுத்து ஆலயம் வரும் பெரியவர்களும் குழந்தைகளும் தரும் பழங்களை விரும்பி சாப்பிடும். முரட்டு காளையாக இருந்தாலும் இந்த காளை யாரையும் முட்டுவதில்லை. துரத்தியதும் இல்லை. சிறுவர் சிறுமியர்களுக்கு இந்த காளையின் மீது அலாதி பாசம் உண்டு. பழக்கமானவர்களை காணும்போது அம்மா என வாய் நிறைய அழைக்கும். கேட்பவர்கள் மனம் நெகிழ்ந்து அந்த காளையின் அருகே வந்து முதுகை தடவி கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். இந்த காளை ஆலயத்தில் இருக்கும் துணிவில் வெளியூர் சென்று இரவு வீடு திரும்பும் ஊர் மக்கள் தைரியமாக ஆலயத்தை கடந்து செல்வார்கள்.
Reviews
There are no reviews yet.