ஓவிய விபரம்: கணினி கலை – எண்ணியல் அச்சு
ஓவியர்: நவீன் குமார்
DIGITAL PRINT/ MATTE LAMINATION / FIBER FRAME / NON BREAKABLE
ஒப்பற்ற தமிழர்களின் கட்டிடக்கலையை இன்றும் பறைசாற்றி கம்பீரமாக வானுயர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய இராசஇராசன் மற்றும் அவரது ஆன்மீக குரு கருவூராரும் இணைந்திருக்கும் இவ்ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றது, காலத்திற்கு ஏற்றார் போல் இந்த ஓவியத்தை எண்ணியல் முறையில் தைத்திங்கள் கலைக்கூடம் புதிப்பித்து உள்ளது.
தமிழர்கள் ஒவ்வொரு இல்லத்திலும் அலங்கரிக்கப் படவேண்டிய ஓவியமாகும்.
கருவூரார் சித்தர் பதினெண் சித்தர்களில் ஒருவர் ஆவார், இவரது குரு மகா சித்தர் போகர், சீடர் இடைக்காடர் ஆகும்.
இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன்முதலாம் இராசேந்திரன்காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
Reviews
There are no reviews yet.