ஆசிரியர்: தொகுப்பும் உரையும்: ந.முருகேசபாண்டியன்
பக்கங்கள்: 72
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எழுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுசியமான பேயின் தோற்றம், பேயின் சேட்டைகள், சுடுகாடு, பிணம் எரியும் நெருப்பு, நெருப்பிலாடும் சிவன், சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு நடனமாடும் சிவனின் தோற்றப்பொலிவு என விரியும் கவிதை வரிகள், உக்கிரமான மொழியில் அமைந்துள்ளன. பெண்ணுடல் காரணமாகச் சமயவாதிகளால் மறுக்கப்பட்டிருந்த பக்திவெளியில், தனக்கான இடத்தை நிறுவிட காரைக்காலம்மையார் முயன்றுள்ளார்.
Reviews
There are no reviews yet.